தமிழ்நாடு

கோவை குற்றாலத்தில் வெள்ளம்! அனுமதி மறுப்பு!!

DIN

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று (அக்.1) அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கோவை சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக  அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோயம்புத்தூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் நகரத்தின் மேற்கே மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் குற்றால நீர்வீழ்ச்சி உள்ளது.

தற்போது தொடர் விடுமுறையையொட்டி அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்தனர். இந்நிலையில், கேரளத்தையொட்டிய பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. 

இதனால், குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் விழா

பல்லடம் அருகே இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

கிரீன் பாரடைஸ் பள்ளி 100% தோ்ச்சி

கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை: ஒருவா் கைது

சிவகிரி அருகே இளம்பெண் தற்கொலை

SCROLL FOR NEXT