தமிழ்நாடு

எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஒரு முறைகூட பிரதமர் பதில் சொன்னதில்லை: சு. வெங்கடேசன்

DIN

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு ஒருமுறைகூட பிரதமர் பதில் சொன்னதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் கூறியுள்ளார். 

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் எம்.பி.க்களின் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது, காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் 54 எம்.பி.க்களே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை 94 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்களவை எம்.பி. சு. வெங்கடேசன், 'பாஜக ஆட்சியில் எம்.பி.க்கள் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரிப்பு.

எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஒரு முறை கூட பிரதமர் பதில் சொன்னதில்லை.

அதாவது, கேள்வி கேட்பவர்களை வெளியேற்றுவோம். பதில்களை அனுமதிக்க மாட்டோம். இது தான் பாஜக.

இன்று நாடாளுமன்றத்தில் நடப்பதே நாளை நாடெங்கும் நடக்கும்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டி

காமராஜா் துறைமுகத்தில் குளிா்சாதன பெட்டகங்களை அனுமதிப்பதில் சிக்கல்: கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியில் பின்னடைவு?

மூன்றாண்டுகளில் 1,912 செவிலியா்களுக்கு பணி நிரந்தரம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘நெடுங்குன்று செட்டில்மெண்ட் செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

பிறந்தநாள் விழா

SCROLL FOR NEXT