முகப்பு
தமிழ்நாடு

பழனி முருகன் கோயிலில் 2வது ரோப் கார் திட்டம் ரத்து!

பழனி முருகன் கோயிலில் இரண்டாவது ரோப் கார் திட்டம் ரத்து செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:17 PM
பகிர்:

பழனி முருகன் கோயிலில் இரண்டாவது ரோப் கார் திட்டம் ரத்து செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வெளிநாட்டு ஒப்பந்த நிறுவனம் கூடுதலாக ரூ.30 கோடி கேட்டுள்ளதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதால், இரண்டாவது ரோப்கார் அமைக்க கடந்த 2017-ம் ஆண்டு முதல் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஒப்பந்தம் செய்த தொகை ரூ.73 கோடிக்கும் கூடுதலாக ரூ.30 கோடி கேட்பதால் இந்த ஒப்பந்தம் ரத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.