முகப்பு
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை: திமுக அரசைக் கண்டித்து அக்.18 முதல் ஆர்ப்பாட்டம் 

அனைத்து தாய்மார்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்காத திமுக அரசைக் கண்டித்து அக்.18 முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
பகிர்:

அனைத்து தாய்மார்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்காத திமுக அரசைக் கண்டித்து அக்.18 முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து தாய்மார்களுக்கும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், 1.60 கோடி விண்ணப்பங்களை பெற்று, அதிலும் கூட 56 லட்சம் விண்ணப்பங்களை நிராகரித்துவிட்டனர். 

வாக்குறுதியை நிறைவேற்ற ஏற்பட்ட கால தாமதத்தால் ஏற்கனவே ஏமாற்றத்தில் இருந்த தாய்மார்கள், திமுக அரசின் துரோக நடவடிக்கையால் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திமுக அரசின் மோசடித்தனத்தை கண்டித்து கிராமப்புறங்களை அதிகம் கொண்ட விழுப்புரம் பெருங்கோட்ட பகுதியில், 18ஆம் தேதி முதல் திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருவள்ளூர், கங்கைகொண்டான், ஸ்ரீபெரும்புதூர், முடிச்சூர், செய்யூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மாநில செயலாளர் வினோஜ் ஒருங்கிணைப்பில் தொடர் ஆர்ப்பாட்டம்  நடைபெறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →