கோப்புப்படம் 
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூா், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.

சென்னையில் விடியற்காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் இன்று வீடு திரும்புகிறார்: கமல்ஹாசன் தகவல்!

எச்சரிக்கை! இளம்பெண்களை அச்சுறுத்தும் சைபர் புல்லிங் தாக்குதல்!

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்! மரத்தைப் பிடித்து தப்பித்தவர்! | Philippines

இந்தியா - ஆஸி. போட்டி டிக்கெட் விற்பனை அமோகம்! 1,75,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன!

நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி!

SCROLL FOR NEXT