தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் வினாடிக்கு 1,713 கன அடி

நீர் பிடிப்புப்பகுதியில் பலத்த மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரே நாளில் வினாடிக்கு 1,713 கன அடியாக வந்தது.

DIN


கம்பம்: நீர் பிடிப்புப்பகுதியில் பலத்த மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரே நாளில் வினாடிக்கு 1,713 கன அடியாக வந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி 32.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 45.0 மி.மீ மழையும் பெய்தது. 

அணையின் நீர்மட்டம் 123.45 உயரமானது (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 3,311.10 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 2,893.20 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,300 கன அடியாகவும் இருந்தது. 

நீர் பிடிப்புப் பகுதியில் பலத்த மழை காரணமாக, செவ்வாய்க்கிழமை அணைக்கு 1,180 கன அடியாக வந்த தண்ணீர், புதன்கிழமை வினாடிக்கு 2,893.20 கன அடியாக வந்தது. அதாவது ஒரே நாளில் வினாடிக்கு 1,713 கன அடி தண்ணீர் வரத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT