ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முடிந்து சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முடிந்து சென்னைக்கு திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக இன்று(அக்.24) பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன், 1213 சிறப்புப் பேருந்துகள் சேர்த்து மொத்தம் 3313 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பிற பகுதிகளிலிருந்து முக்கிய தொழில் நகரங்களுக்கு செல்லும் வகையில் 1846 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரயில் மோதி மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 3 பேர் பலி
இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.