தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகள் வேலைநிறுத்தம்: தமிழக அரசு பேச்சுவார்த்தை

DIN

வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன், தமிழக அரசு இன்று(அக்.24) பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தவறு செய்யாமல் இயங்கிய 120 ஆம்னி பேருந்துகளை, அதிக கட்டணம் வசூலித்ததாக கூறி சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்த அறிவிப்பை தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.

ஆம்னி பேருந்துகள் இன்று(அக்.24) மாலை 6 மணி முதல் இயங்காது என அறிவித்து இருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சொந்த ஊர் திரும்ப ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், வேலை நிறுத்த அறிவிப்பால், சொந்த ஊர் திரும்புவோர் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழக ஆம்னி பேருந்துகள் சங்கம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

SCROLL FOR NEXT