தமிழ்நாடு

நீடாமங்கலம் அஞ்சலக அலுவலரைக் காணவில்லை!

நீடாமங்கலம் தபால் நிலைய அதிகாரியை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். 

DIN

நீடாமங்கலம் தபால் நிலைய அதிகாரியை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். 

நீடாமங்கலம் புதுத்தெருவில் வசித்து வருபவர் துரைசாமி மகன் செந்தில்வேலன் (50) இவர் நீடாமங்கலம் தபால்நிலைய அதிகாரியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி அமராவதி (49) வலங்கைமான் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.அவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை படித்து வருகிறார்.

கடந்த 17ம் தேதி முதல் செந்தில்வேலனை காணவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடினர். தபால்துறை உயரதிகாரிகளும், நீடாமங்கலம் தபால்நிலைய சக ஊழியர்களும் செந்தில்வேலனை காணாததால் அதிர்ச்சியடைந்தனர். தபால்நிலைய உயரதிகாரிகள் நீடாமங்கலம் வந்து கணக்கு வழக்குகளையும், இதர கோப்புகளையும் சரிபார்த்தனர்.

கணக்கு வழக்குகள், கோப்புகளை செந்தில்வேலன் முறையாக பராமரித்துள்ளதாக கூறப்படுகிறது. செந்தில்வேலன் எல்லோரிடமும் நல்ல முறையில் பழகக்கூடியவர் அவர் காணாதது சக நண்பர்கள், அலுவலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால்  செந்தில்வேலன் மனைவி அமராவதி நீடாமங்கலம் காவல் நிலையத்தில் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கடந்த 21ம் தேதி புகார் செய்தார். 

புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்வேலனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT