தமிழ்நாடு

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயார்: டிடிவி தினகரன்

DIN

தஞ்சாவூர்: வருகிற மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை காலை பேசியது:

வருகிற மக்களவைத் தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எடப்பாடி பழனிச்சாமி உள்ள கூட்டணியில் இடம் பெற வேண்டுமா என என்னிடம் எங்களது நிர்வாகிகள், தொண்டர்கள் கேட்கின்றனர். அதனால் தனித்து நிற்பது சாலச்சிறந்தது என்ற முடிவை எடுக்கலாம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லை. செலவைக் குறைப்பதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறினாலும், ஏற்கனவே தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் செலவு அதிகமாகும். எனவே மத்திய அரசு தங்களுக்கு அறுதி பெரும்பான்மை இருப்பதால் எதையும் செய்யக்கூடாது. மக்களிடம் கருத்து கேட்ட பிறகு செய்ய வேண்டும்.

என் மீதான அமலாக்கத் துறை வழக்கில் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி நடந்து கொள்வேன்.

சனாதனம் குறித்து உதயநிதி பேசியது தவறு. அதற்காக அவர் தலைக்கு விலை பேசுவது அதைவிட காட்டுமிராண்டித்தனம்.

கடைமடைப் பகுதியில் காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்றுவதற்கு கர்நாடகத்திடமிருந்து தமிழக அரசு தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்” என்றார்.

அப்போது, அமமுக துணைப் பொதுச் செயலர் எம். ரெங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணம் எப்போது? - ராகுல் காந்தி பதில்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு எப்போது?

சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்!

மிகப்பெரிய தோல்வியை நோக்கி மஸ்க்: விவேக் வாத்வா

ரூ.1000 கோடி எதிர்பார்ப்பில் புஷ்பா - 2 படக்குழு!

SCROLL FOR NEXT