சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’ கடந்த செப். 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | காற்றில் கம்பு சுற்றும் பாஜக தலைவர்கள்: உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்தும் மேடையில் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காத அமைச்சர் சேகர் பாபுவைக் கண்டித்தும் இரு அமைச்சர்களும் பதவி விலகக் கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.
வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.