முகப்பு
தமிழ்நாடு

புதுக்கோட்டையில் 3 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

புதுக்கோட்டையில் 3 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 12 செப்டம்பர், 2023 at 11:48 AM
புதுக்கோட்டை நிஜாம் குடியிருப்பிலுள்ள எஸ். ராமச்சந்திரனின் அலுவலகம்.
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 3 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த குவாரி ஒப்பந்ததாரர் எஸ். ராமச்சந்திரனின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமானவரின் அலுவலகம் என மூன்று இடங்களில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ். ராமச்சந்திரனின் முத்துப்பட்டினம் வீடு, நிஜாம் குடியிருப்பிலுள்ள அலுவலகம் மற்றும் அவருக்கு நெருக்கமானவரின் கந்தர்வகோட்டையிலுள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisement

இதைத் தொடர்ந்து, திண்டுக்கல்லில் உள்ள  ராமச்சந்திரனின் உறவினரும், மணல் ஒப்பந்ததாரருமான ரத்தினம் வீடு, அவரது மைத்துனர் கோவிந்தன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்க துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.