திருச்செந்தூர்: முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார்.
தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இதையும் படிக்க | மகளிா் உரிமைத் தொகைத் திட்டம்: காஞ்சிபுரத்தில் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு வங்கி ஏடிஎம் கார்டை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருச்சந்திரன், நகராட்சி துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.