தமிழ்நாடு

தமிழகத்தில் 300ஐ தாண்டிய டெங்கு: கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்!

DIN

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 300ஐ தாண்டியுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட தகவலில், 

கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் 300க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

செப்டம்பர் மாதம் தொடங்கிய 13 நாள்களில் தமிழகத்தில் மொத்தம் 204 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளில் சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்படுகிறது. 

இந்தாண்டு டெங்கு பாதித்து இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இனிவரும் 3 மாதங்கள் மிகவும் கவனமுடன் இருக்க அதிகாரிகளுக்கு மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

மழைக்கால நோய்கள் தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறிய அளவில் காய்ச்சல் ஏற்பட்டாலும், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை அணுகி உரிய மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

தொடர் காய்ச்சல், தலைவலி, குமட்டல், உடல் வலி இருப்பின் சற்றும் யோசிக்காமல் ரத்தப் பரிசோதனை செய்து, டெங்கு பாதிப்பு உள்ளதா எனத் தெரிந்துகொள்வது அவசியமாகும். 

அந்தந்த மாவட்ட மாநகராட்சிகள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளன. டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்பே ஏடிஎஸ் கொசுப் புழுக்களை அழிக்க மாநகராட்சி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. 

மேலும், டெங்கு பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் குடும்பம்! ஒருவர் பலி!

SCROLL FOR NEXT