ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு குறித்து ஏன் விவாதிக்கவில்லை? ஸ்டாலின்
ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் ஏன் விவாதிக்கவில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் ஏன் விவாதிக்கவில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில், இந்தியாவின் குரல் என்ற தலைப்பில், முதல்வர் ஸ்டாலின் ஒரு விடியோ வெளியிட்டிருந்தார். அதில், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்த குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டிருந்தார்.
அந்த வகையில், சனிக்கிழமை காலை, இரண்டாவது விடியோவை ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அந்த விடியோவில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், கடந்த 2014, 2019ஆம் ஆண்டுகளைப் போல, வரும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக ஒட்டுமொத்தகமாக வீழ்த்தப்பட வேண்டும்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு குறித்து ஏன் விவாதிக்கவில்லை? சிஎஜி அறிக்கை குறித்து ஏன் விவாதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிஏஜி அறிக்கை, மத்திய அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக, நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவில்லை.
வாய்க்குள் நுழையாத பெயர்களை திட்டங்களாக வைக்கிறது பாஜக அரசு. 60 மாதங்கள் கொடுங்கள், இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன் என்று கூறிய மோடி, தற்போது இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றிவிட்டாரா? இந்தக் கேள்விக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் பேசியுள்ளார்.