சென்னை சென்டரல் - அரக்கோணம் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில்சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 21.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43130) செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூன் 6,8) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவாடி - சென்ட்ரல் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணிக்கு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43932) புதன், வெள்ளிக்கிழமைகளில் (ஜூன் 7,9) அரக்கோணத்துடன் நிறுத்தப்படும். அரக்கோணம் - சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
வேளச்சேரியிலிருந்து இரவு 10.30 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43799) வியாழக்கிழமை (ஜூன் 8) சென்னை கடற்கரையுடன் நிறுத்தப்படும். சென்னை கடற்கரை - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 8.25 மணிக்கு வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43794) வெள்ளிக்கிழமை (ஜூன் 9) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி - சென்னை கடற்கரை இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 10.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43132) வியாழக்கிழமை (ஜூன் 8) ஆவடியுடன் நிறுத்தப்படும். ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
முழுமையாக ரத்து: சென்னை சென்ட்ரலிருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43001) புதன்கிழமை (ஜூன் 7) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) வரை முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43801) புதன்கிழமை (ஜூன் 7) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) வரை முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிலிருந்து இரவு 11.55 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரயில் (வண்டி எண்: 43892) வியாழக்கிழமை (ஜூன் 8) முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலிருந்து நள்ளிரவு 11.30 மணி மற்றும் 11.45 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் (வண்டி எண்கள்: 66007,43025) வியாழக்கிழமை (ஜூன் 8) முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.