கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல்!

DIN

சென்னை தாம்பரம் ரயில்நிலையத்துக்கு வந்த நெல்லை விரைவு ரயிலில் ரூ. 4 கோடி பணம் கொண்டு செல்வதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலில் படி தாம்பரம் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை விரைவு ரயிலில் சோதனையிட்டனர்.

அப்போது, 6 பைகளில் கட்டுகட்டாக பெட்டிகளில் மறைத்து பணத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து மூன்று நபர்களை கைது செய்த காவல் துறையினர், தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அப்போது, அந்த மூன்று நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்வதாகவும், இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இணை ஆணையர் மகேஸ்வரி மற்றும் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் பணத்தை எடுத்து வந்த சதீஷ் (வயது 33) நவீன் (வயது 31) பெருமாள் (வயது 25) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாம்பரம் வட்டாட்சியர் நடராஜன் முன்னிலையில் காவல் துறையினர் கருவுலத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT