தமிழ்நாடு

பாஜக திட்டப்படி இபிஎஸ் செயல்படுகிறார்: முதல்வர் ஸ்டாலின்

DIN

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

"உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு, 12,000 ரூபாய். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் இதுவரைக்கும் ஒரு கோடியே 15 லட்சம் சகோதரிகள் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மகளிர் வாழ்வில் மட்டுமல்ல, கிராமப்புறப் பொருளாதாரத்திலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெரும் புரட்சி செய்கிறது.

பாஜக போட்டுக் கொடுத்த பிளான்படி, பாஜகவுக்கு எதிரான வாக்குகள் தி.மு.க.விற்கு வராமல் தடுக்க பழனிசாமி தனியாக நிற்கிறார்.

அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் பாஜகவினர். ஒட்டுமொத்தமாக எல்லோரும் தி2ல்லிக்கு கீழே இருக்க வேண்டும்; இதுதான் பா.ஜ.க.வின் அஜெண்டா.

அதனால்தான் கூட்டணி அரசாக இருந்தாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் தன்னுடைய கைப்பிடியிலேயே வைத்திருக்கிறது. பாஜகவுக்கு கைப்பாவையாக உள்ளார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

இந்த அவலங்கள் எல்லாம் தீர, 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்.

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தி.மு.க.வும் காங்கிரஸும் பாடுபட்டால், புதுச்சேரியை பின்னோக்கி இழுத்துச் செல்ல நினைக்கிறது பாஜக" என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் உதவியாளருக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா ஹைதராபாத்?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

டி20 உலகக் கோப்பையில் 3 சுழல்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது ஏன்? இலங்கை தேர்வுக்குழு தலைவர் விளக்கம்!

இந்தியன் - 3 டிரைலருடன் உருவான இந்தியன் - 2?

SCROLL FOR NEXT