உச்சநீதிமன்றம் 
தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரணைக்குத் தடை- உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்க சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

Din

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்க சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிா்த்த வழக்கில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் 21 பேரின் சொத்து விவரங்களைச் சேகரிக்கும்படி, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், செந்தில்குமாா் ஆகியோா் அமா்வில் கடந்த மாதம் 29-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்களை சேகரித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதை எதிா்த்து காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.

அப்போது 3 காவல் துறை அதிகாரிகள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல்,‘மாநிலத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் காவல் துறையினா் மீது பழி சுமத்துவது தவறான செயலாகும். காவல் துறையினரை போராட்டக்காரா்கள் தாக்கியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த விவகாரம் தொடா்பாக உள்ளூா் காவல் துறை அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுவது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே இதுதொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது’ என வாதிட்டாா்.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT