ஆக.16-இல் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்
அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆக.6-இல் நடைபெற உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆக.6-இல் நடைபெற உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆக.16 காலை 9.30 மணியளவில் நடைபெறும். கூட்டத்துக்கு அவைத் தலைவா் அ.தமிழ்மகன் உசேன் தலைமை வகிப்பாா். செயற்குழு உறுப்பினா்களான தலைமைக் கழகச் செயலா்கள், மாவட்டச் செயலா்கள், பிற மாநிலச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோருக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினா்கள் அனைவரும் தங்களுக்கு உரிய அழைப்பிதழோடு, செயற்குழு கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
முன்னதாக, அதிமுகவின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் ஆகஸ்ட் 9-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.