முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி நினைவு நாணயத்தில் ஹிந்தி: மு.க. ஸ்டாலின் எதிர்த்தாரா? - இபிஎஸ்

திமுக - பாஜக இடையே ரகசிய உறவு உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 3:53 PM
செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி
பகிர்:

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தில் ஹிந்தியில்தான் பெயர் உள்ளதாகவும், அதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக. 18) விமர்சித்தார்.

திமுக - பாஜக இடையே ரகசிய உறவு உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி,

Advertisement

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டவைதான். முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளதாக உச்சநீதிமன்றமே அறிவித்துவிட்டது. அதிமுகவால் கொண்டவரப்பட்ட பல திட்டங்களை திமுக கிடப்பில் போட்டுள்ளது.

கருணாநிதி நினைவு நாணயத்தின் பெயர் ஹிந்தியில்தான் உள்ளது. எதிலும் தமிழ் எனக்கூறும் மு.க. ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாரா? முதல்வர் இதனை எதிர்க்கவில்லை.

கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவருமான ராகுல் காந்தியை அழைத்திருக்கலாமே? ஏன் அழைக்கவில்லை.

கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாக அண்ணாமலை கூறியவுடன் கூறியதைத் தொடர்ந்து, ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காது எனக் கூறினர். ஆனால், அரசு சார்பில் பங்கேற்போம் என்கின்றனர்.

திமுக - பாஜக இடையே ரகசிய உறவு உள்ளது என்பதை முன்பு இருந்தே கூறி வந்தோம். அது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இணைந்திருக்கும் கட்சிகள், திமுகவில் இணைந்துவிட்டனர். அவர்களுக்கு எந்தத் தனித் தன்மையும் இல்லை என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.