முகப்பு
கனிமொழி எம்.பி.,
தமிழ்நாடு

பெண்களை ஆபாசமாக சித்திரிப்பது அருவெறுக்கத்தக்கது: கனிமொழி

ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்-க்கு கனிமொழி ஆதரவு.

தமிழ்நாடு

பெண்களை ஆபாசமாக சித்திரிப்பது அருவெறுக்கத்தக்கது: கனிமொழி

ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்-க்கு கனிமொழி ஆதரவு.

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 4:15 PM
கனிமொழி எம்.பி.,
பகிர்:

பெண்களை ஆபாசமாக, அருவெறுக்கத்தக்க முறையில் பிரசாரம் செய்வதை ஏற்க இயலாது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

’’பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரசாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்.

புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்., மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்., கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கனிமொழி பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →