ராமேசுவரத்தின் 14 மீனவர்கள் இலங்கை படையால் கைது!
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி...
தமிழ்நாடுராமேசுவரத்தின் 14 மீனவர்கள் இலங்கை படையால் கைது!
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து 2 படகுகளில் 14 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, படகுகளை பறிமுதல் செய்து 14 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை தலைமன்னார் கடற்படை தளத்தில் வைத்து 14 மீனவர்களையும் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை உயர்வு!! இன்றுமுதல் அமல்
கரைக்கு திரும்பிய பிற மீனவர்கள், இலங்கை கடற்படையினர் படகுகளை சேதப்படுத்தியதாகவும், வலைகளை கிழித்து கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை படையினர் கைது செய்து வரும் நிலையில், இதுவரை இலங்கை சிறையில் 141 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.