முகப்பு
மேட்டூர் அணையில் அதிகாரிகள் ஆய்வு.
தமிழ்நாடு

மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்பு: அதிகாரிகள் ஆய்வு!

மேட்டூர் அணை விரைவில் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு

மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்பு: அதிகாரிகள் ஆய்வு!

மேட்டூர் அணை விரைவில் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On : 6 டிசம்பர், 2024 at 9:02 AM
மேட்டூர் அணையில் அதிகாரிகள் ஆய்வு.
பகிர்:

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நீர்வரத்து கணிசமாக இருக்கும் நிலையில் அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர், பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115.32 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்தும் திறப்பும் இதே நிலையில் நீடித்தால் எட்டு நாட்களில் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

மேட்டூர் அணை விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதால் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் இன்று மேட்டூர் அணை அணையின் வலது கரை, இடது கரை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு சுரங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

நீர்வளத் துறையின் சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம்,உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ் மதுசூதனன் ஆகியோருடன் ஆணையின் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் ஆலோசனை நடத்தினார்.

அணை நிரம்பினால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அணையின் வலது கரையிலும் இடது கரையிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவும் உபரி நீரை திறக்க தயார் நிலையில் குழுக்களை நிறுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் படர்ந்து வரும் பச்சை நிற படலங்களை நிரந்தரமாக தடுக்கவும் மேட்டூர் அணை பூங்காவை பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →