தமிழ்நாடு

கருணாநிதி புத்தக வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு.

DIN

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பேரவைத் தலைவர் அப்பாவுவைத் தலைவராகக் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்ட 'சட்டமன்ற நாயகர்-கலைஞர்' நூற்றாண்டு விழா சிறப்பு மலர் இன்று வெளியிடப்பட்டது.

இன்று (9.12.2024) சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.

மேலும் 'நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் பேரவையின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகைகளை முதல்வர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உயர் கல்வித் துறை அமைச்சரும், விழாக் குழு இணைத் தலைவருமான முனைவர் கோவி. செழியன், சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை மற்றும் அரசு அலுவலர்களுடன் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டார்.

முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 6 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இருவரும் பங்கேற்கவிருப்பதாகக் கூறப்பட்டது. இரு தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்பது குறித்து பல விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார். இந்த விவகாரம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதன்பின்னர், சென்னையில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நூலான 'ICONOCLAST' (ஐகானோக்ளாஸ்ட்) நூல் வெளியீட்டு விழா சென்னை விசிக தலைமை அலுவலகத்தில் டிச. 7 அன்று நடைபெற்ற நிலையில் அதில் திருமாவளவன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி வாகனங்களை அரசு முறையாக ஆய்வு செய்கிறதா?

"உங்களுடன் ஸ்டாலின்" முதல்வர் பெயருக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம் | செய்திகள் சில வரிகளில்|6.8.25

டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்!

பாகிஸ்தானில்.. இம்ரான் கானை விடுவிக்கக்கோரி சுதந்திர நாளன்று 2-ம் கட்ட போராட்டம்!

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்!

SCROLL FOR NEXT