மழை நிலவரம் Center-Center-Chennai
தமிழ்நாடு

சென்னையில் தூறல் தொடங்கியது! சமூக வலைதளங்களில் சொல்வது போல நடக்குமா?

சென்னையில் தூறல் தொடங்கியிருக்கிறது, சமூக வலைதளங்களில் வரும் தலைப்புகளைப் பார்த்து அச்சப்பட வேண்டாம்

DIN

சென்னையில் தூறல் தொடங்கிய நிலையில் இந்த மழை குறித்து சமூக ஊடகங்களில் வரும் தகவல்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் 11 மணியளவில் பரவலாக லேசான மழை தொடங்கியிருக்கிறது.

தற்போது சென்னையில் அம்பத்தூர், மயிலாப்பூர், மெரினா, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 9 சென்டி மீட்டர், ஶ்ரீவில்லிபுத்தூரில் 5 சென்டி மீட்டர் என்ற அளவிலும் கன மழை பெய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலுக்குள் மழை நீர் தேங்கியிருக்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.

இந்த மழை குறித்து அச்சப்பட வேண்டுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், அரக்கன் வரான் என்று சமுக ஊடகங்களில் வரும் தகவல்களைப் பார்த்து பயப்பட வேண்டாம், அணைகள் நிரம்பி ஆபத்து ஏற்படுமா என்றால் இல்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா, விழுப்புரம் கடலோரப் பகுதி, புதுவை, கடலூர் பகுதிகளுக்கு மழை வாய்ப்பு இல்லை. தென் மாவட்டங்களில் குமரிக்கு மட்டுமே முழுமையாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மழை இது மொத்தமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மழை மட்டுமே. ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தான் மழை கிடைக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT