அமைச்சர் கே.என். நேரு EPS
தமிழ்நாடு

நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு! அமைச்சர் நேரு

நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் தொடர்பாக..

DIN

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் கே.என். நேரு திங்கள்கிழமை தெரிவித்தார்.

இனி கழிவுகளைக் கொட்ட வந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த அமைச்சர், தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் சுற்றுவட்டார மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்கள், நீா்நிலைகளில் கேரள மாநில கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து மா்மநபா்கள் கொட்டினா். கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

அவை, திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதற்கான ரசீதுகளும் கைப்பற்றப்பட்டன. இதைகொட்டியவா்கள் மீது கடும் நடவடிக்கை எ டுக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினா்.

இதற்கிடையே தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கேரள மாநில குப்பைகளைத் திருப்பி எடுத்துச் செல்ல உத்தரவிட வலியுறுத்தப்பட்டது. அதன்பேரில், கேரள அரசு கழிவுகளை மீண்டும் எடுத்துச் சென்று மேலாண்மை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் கேரள மாநில வருவாய்த்துறையினா், சுகாதாரத்துறையினா் நேரில் வந்து ஆய்வு செய்து 16 லாரிகள் மூலம் கழிவுகளை திருப்பி எடுத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடக்கு மாரியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்

மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

சரித்திரப் பதிவேடு குற்றவாளி மாநகர எல்லைக்குள் நுழைய ஓராண்டு தடை

காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT