தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி? பொதுக்குழுவில் தீர்மானம்!

DIN

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் சூழல் தற்போது இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி  சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானத்தில் தெரிவித்திருப்பதாவது:

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயல்பாகவே மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவதை உறுதிசெய்கிறது. அதற்கேற்ற வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஒட்டுமொத்த இந்தியாவின் அரசு நிர்வாகம் எந்த சிக்கலும் இல்லாமல் இயங்க வேண்டும் என்பதுதான். இதை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொண்டு செயல்படும் வரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

2024 மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது. 

எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு  அதிகாரத்தை வழங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

கூட்ட நெரிசலில் சிக்கிய கவின்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

SCROLL FOR NEXT