முகப்பு
தமிழ்நாடு

திருவள்ளூரில் டிட்டோ ஜாக் அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:41 PM
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (டிட்டோ- ஜாக்) ஞாயிற்றுக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் உயர்மட்ட குழுவினர் ராஜாஜி, பாலுமகேந்திரன், முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

டிட்டோ- ஜாக் பொதுக்குழு உறுப்பினர் சேகர், லோகைய்யா, கோகுலன், பாலசுபந்தரம், ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிட்டோ- ஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் பங்கேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கும் அரசாணை எண் 247-ஐ ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →