முகப்பு
தமிழ்நாடு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் மர்ம நபர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 4:41 PM
பகிர்:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் மர்ம நபர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பழமை வாய்ந்த கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் தமிழ்நாடு அரசு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் போதையில் இருந்த நபர் ஒருவர், கையில் பெட்ரோல் கேனுடன் கோயிலின் பூட்டப்பட்ட கதவின் முன்பு உள்ள நுழைவு வாயிலில் அமர்ந்துகொண்டு பெட்ரோலை தரையில் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

இது குறித்து அப்பகுதியில் இருந்த மக்கள் மயிலாப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயிலில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.