நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை அணிந்து தமிழக எம்பிக்கள் போராட்டம் 
தமிழ்நாடு

நாடாளுமன்றத்தில் கருப்புச் சட்டை அணிந்து தமிழக எம்பிக்கள் போராட்டம்!

மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.

DIN

மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்துக்குப் புயல் வெள்ள நிவாரண நிதி உதவி மற்றும் வளா்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி எம்பிக்களும் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அதேபோல், மத்திய அரசை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் தில்லியில் இன்று தர்னா போராட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நின்ற லாரி மீது காா் மோதல் நிதிநிறுவன அதிபா் உயிரிழப்பு

புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்து முதியவா் பலி

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

காலணி விற்பனையகத்தில் ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT