முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு  வினாடிக்கு 5,600 கனஅடியில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 4:59 PM
பகிர்:

காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு  வினாடிக்கு 5,600 கனஅடியில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.07அடியிலிருந்து 66.52 அடியாக சரிந்தது. அணையில் இருந்து  காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. 

இன்று சனிக்கிழமை காலை அணையிலிருந்து வினாடிக்கு 4,000 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 25 கன அடிவீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து சனிக்கிழமை(பிப்.10) காலை வினாடிக்கு 58 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 29.78 டிஎம்சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →