அண்ணாமலை 
தமிழ்நாடு

தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு

DIN

சென்னை: தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக தமிழ்மாநிலத் தலைவர் அண்ணாமலை மேல்முறையீடு செய்துள்ளார்.

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், அண்ணாமலை இரு மதத்தவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டியதாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 8 ஆம் தேதி அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ அமைப்புதான் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக அண்ணாமலை பேட்டி யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

இதையடுத்து இரு மதத்தவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டுவதாக அண்ணாமலை மீது சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணைக்கு நேரில் ஆஜராக அண்ணாமலைக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நீதிமன்ற அழைப்பாணைக்கு எதிராகவும், தனது மீதான புகார் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலை மீதான புகார் மனுவை ரத்து செய்ய மறுத்து, மனு மீதான வழக்கை சட்டத்திற்குட்பட்டு சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அந்த மேல்முறையீடு மனுவில், தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT