அமைச்சர்  
தமிழ்நாடு

2 ஆண்டுகளில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள்: வேளாண் பட்ஜெட்

கடந்த 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

நேற்று பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர் ஆற்றி வரும் உரையில்,

  • கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • விவசாய நிலங்களின் மொத்த சாகுபடி இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

  • உணவு தானிய உற்பத்தி 116 டன்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • மானிய விலையில் தொடர்ந்து விவசாய கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  • 45 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

  • கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

SCROLL FOR NEXT