பாரத் மாதா கி ஜெய்..! வந்தே மாதரம்..! கூறி உரையை முடித்த மோடி!
திருப்பூர், பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் இன்று (பிப். 27) நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது உரையைத் தொடங்கினார். அப்போது தமிழ்ப் பண்பாட்டைத் தமிழ் கலாசாரத்தை உலகம் முழுக்க எடுத்துச் சென்றுள்ளார் பிரதமர் மோடி . அவரது ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்றார்.
இதன்பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக வெல்லும். 400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாகப் பிரதமர் மோடி ஆட்சியில் நீடிப்பார். தமிழகம் முழுவதும் பிரதமர் மோடியின் புகழ் பரவியுள்ளது என்று பேசினார்.
இறுதியாக பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அப்போது,
தமிழ்மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. என் மனதுக்கு மிகவும் நெருக்கமான மொழி தமிழ் என்றெல்லாம் பேசினார்.
தமிழகத்தில் பாஜகவில் பலம் அதிகரிக்கும். தமிழகத்தில் பாஜகவின் மீது பெரும் நம்பிக்கை வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும், பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. தமது நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள சிலர் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கின்றனர்.
எம்ஜிஆர்-ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார் மோடி. காங்கிரஸ்-திமுக கட்சி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எந்தவகையிலும் பாடுப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
உரையின் நிறைவில் பாரத் மாதா கி ஜெய்.. ! பாரத் மாதா கி ஜெய்..! பாரத் மாதா கி ஜெய் ...! வந்தே மாதரம்..! வந்தே மாதரம்..! வந்தே மாதரம்..! எனக்கூறி தனது உரையை முடித்தார் பிரதமர் நரேந்திர மோடி.