உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

சென்னை புத்தகக் காட்சியை திறந்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின்!

47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


சென்னை: 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைத்து, கலைஞா் பொற்கிழி விருதுகள், பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிற்பகல் 3 மணிக்கு புத்தகக் காட்சியை திறந்து வைக்கவுள்ளதாக பபாசி தற்போது அறிவித்துள்ளது.

தொடர்ந்து, கலைஞா் பொற்கிழி விருதுகள், பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை வழங்கி தொடக்க விழாவில் சிறப்புரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவையில் ஆா்எஸ்எஸ் குறித்த அவதூறு கருத்துகளை அமைச்சா்கள் திரும்பப் பெற வேண்டும்: வானதி சீனிவாசன்

3 ஏ.டி.எஸ்.பி., 3 டி.எஸ்.பி.-க்கள் பணியிட மாற்றம்

இளம்பெண் கொன்று எரிப்பு: இளைஞா் கைது

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் படுகாயம்

வங்கிக் கணக்குகள் முடக்கம்: ‘புலனாய்வு அமைப்புகள் அடாவடித்தனம் கூடாது’

SCROLL FOR NEXT