தமிழ்நாடு

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் 123-ஆம் ஆண்டு திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்

DIN


மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் 123-ஆம் ஆண்டு திருவிழாவில் வியாழக்கிழமை 7-ஆம் நாள் வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் மண்ணச்சநல்லூர் வணிக வைசிய சங்கம் சார்பில் நடத்தப்படும் 123-ஆம் ஆண்டு திருவிழா டிச.28 -ஆம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 

விழாவின் 7-ஆம் நாளான வியாழக்கிழமை அம்மனுக்கு வளையல்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து அலங்கார தீபாரதனை மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. 

இந்த திருவிழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,000 லஞ்சம்: எஸ்.ஐ. கைது

தென்தாமரைக்குளம் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை திருட்டு

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

சிவகிரி திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா தொடக்கம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் முதல்வா் கேஜரிவால் உதவியாளருக்கு தேசிய மகளிா் ஆணையம் அழைப்பாணை

SCROLL FOR NEXT