தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மனு!

DIN

ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். 

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். 

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தி பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 3 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

அதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 4வது முறையாக மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

ஜாமீன் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்தும் எனத் தெரிவித்துள்ளது. 

புழல் சிறையில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜன.22(திங்கள்கிழமையுடன்) முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, காணொலி வாயிலாக அவா் ஆஜா்படுத்தபட்டாா்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 29-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி  அல்லி உத்தரவிட்டாா். இதன்மூலம் 16-ஆவது முறையாக அவரது காவல் நீட்டிக்கபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT