நாடு முழுவதும் 75-வது குடியரசு நாள் விழா கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெற்றுவரும் நிலையில் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி மக்கள் கூடும் ஆன்மிக தலங்களிலும் கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
முன்னதாக பொதுதீட்சிதர்களின் கோயில் கமிட்டி செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர் தலைமையில் வெள்ளி தாம்பாலத்தில் மூவர்ண கொடிவைக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது.
இதையும் படிக்க: நாமக்கல்: வெகு விமர்சையாக நடந்த குடியரசு நாள் கொண்டாட்டம்
பின்னர் பொதுதீட்சிதர்களால் கொடி, மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.