தமிழ்நாடு

தஞ்சாவூர் அருகே  திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இதில் விடுவதற்காக ஏறத்தாழ 700 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றைப் பிடிப்பதற்காக சுமார் 310 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 50 பேர் வீதம் களம் இறக்கப்பட்டு வருகின்றனர். காளையைக் குறிப்பிட்ட தொலைவு வரை பிடித்துச் சென்று வெற்றி பெறுபவர்களுக்கு சில்வர் பாத்திரங்கள், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், கோட்டாட்சியர் செ. இலக்கியா கலந்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய பிளாக் பெல்ட் கராத்தே போட்டிக்கு தஞ்சை மண்டலத்திலிருந்து 85 போ் தோ்வு

மீன்பிடி தடைக்காலம்: உக்கடம் சந்தைக்கு மீன்வரத்து குறைவு

ஏலகிரி மலையில் காவலா் குடியிருப்புகள் அமைக்கப்படுமா?

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் தினம்

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

SCROLL FOR NEXT