முகப்பு
தமிழ்நாடு

மதுரை, கோவை மெட்ரோ ரயில்: ஆசிய முதலீட்டு வங்கி நாளை ஆய்வு!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்கவுள்ள ஆசிய முதலீட்டு வங்கி நாளை(ஜூலை 3) ஆய்வு செய்யவுள்ளது.

Updated On : 2 ஜூலை, 2024 at 1:47 PM
பகிர்:

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்கவுள்ள ஆசிய முதலீட்டு வங்கி நாளை(ஜூலை 3) நேரில் ஆய்வு செய்யவுள்ளது.

கோவை மாநகரில் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.10,740 கோடி மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் வகையில் ரூ.11,368 கோடி மதிப்பீட்டிலும் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

இந்நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை ஆய்வு செய்ய ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் இன்றி சென்னை வந்துள்ளனர்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கும் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை(ஜூன் 3) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 4) கோவை மற்றும் மதுரையில் நேரில் ஆய்வு செய்யவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.