மதுரையில் மூதாட்டிகள் தொடா்ந்து கொலை செய்யப்படும் சம்பவத்தைப் பாா்க்கும்போது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகுகிறது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் சமூகஊடகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டப் பதிவு:
மதுரையில் தொடா்ந்து மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 3 போ் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இப்போதும் முத்துலட்சுமி (70) கொலை செய்யப்பட்டுள்ளாா்.
தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படும் நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.
ஆனால், தமிழகக் காவல் துறையினரை, எதிா்க்கட்சிகளைப் பழிவாங்க மட்டுமே முதல்வா் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாா். பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை உணா்ந்து, உடனடியாக சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.