நயினார் நாகேந்திரன்(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

சிபிசிஐடி விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜர்!

தாம்பரத்தில் ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்..

DIN

சென்னை: ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏற்கெனவே பாஜக நிர்வாகிகள் கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் மற்றும் நயினார் நாகேந்திரனின் ஓட்டுநர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், முதல்முறையாக நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தபோது, சென்னை தாம்பரத்தில் கடந்த ஏப். 6-ஆம் தேதி வந்த நெல்லை விரைவு ரயிலில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டபோது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமான உணவக ஊழியா்களிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்டது. 

சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நயினாா் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்புச் செயலா் கேசவ விநாயகம் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது.

கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் ஏற்கெனவே ஆஜராகி பதிலளித்துள்ள நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று முதல்முறையாக ஆஜராகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பற்றி எரியும் இந்தோனேசியா... நாடாளுமன்றக் கட்டடத்துக்கு தீ வைப்பு! 3 பேர் பலி!

உ.பி.: மது அருந்திய 2 பேர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: மும்பையில் போலீஸாரின் விடுமுறைகள் ரத்து

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் ரச்சிதா ராம்?

SCROLL FOR NEXT