தமிழ்நாடு

கள்ளச்சாராய பலிக்கு காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணம்: எ.வ. வேலு

DIN

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காவல் துறையின் மெத்தனப்போக்கே காரணம் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தை அமைச்சர்கள் எ.வ. வேலு, மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் நலம் விசாரித்து மருத்துவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர்கள்

பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ. வேலு, கள்ளச்சாராய விவகாரத்தில் காவல் துறை மெத்தமாக இருந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் தவறு நடந்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை.

கள்ளச்சாராயம் விற்பதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இறந்தோரின் உடல்கள் உடற்கூராய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளோம்.

கள்ளச்சாராயம் தொடர்பான சம்பவத்தை அறிந்ததும் முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்களை அனுப்பி வைத்தார். கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தியுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

SCROLL FOR NEXT