கோப்புப்படம் 
தமிழ்நாடு

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் தலைமைக்கு அனுப்பிவைப்பு!

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியலை அகில இந்திய கமிட்டியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

DIN

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த வாரம் கையெழுத்தானது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர்.

தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியலை அகிய இந்திய கமிட்டியின் ஒப்புதலுக்காக தமிழக கமிட்டு அனுப்பி வைத்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதல் அளித்த பிறகு, நாளை காலை காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, ஐயூஎம்எல், கொமதேக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தனியாா் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வைரஸ் காய்ச்சல்: 15 போ் மருத்துவமனையில் சிகிச்சை

இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாகக் கூறி ஓய்வுபெற்ற செவிலியரிடம் பணம் பறிப்பு

சேலம் பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி

முதல்வா் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டி: தொடங்கிவைத்தாா் ஆட்சியா்

SCROLL FOR NEXT