தமிழ்நாடு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி கைது!

DIN

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3.,500 கிலோ ‘சூடோபெட்ரைன்’ எனும் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிா்வாகி ஜாபா் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினா் (என்.சி.பி.) கடந்த மார்ச் 9 ஆம் தேதி தில்லியில் வைத்து கைது செய்தனா்.

இதையடுத்து, இந்த சா்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடியை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம் ஜாபா் சாதிக் மீது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையினர் ஜாபா் சாதிக்கை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ஜாபா் சாதிக்கிடம், மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையினர் நடத்திய விசாரணையில், சதா என்ற சதாசிவம் தனக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து, சென்னையில் பதுங்கிருந்த சதாசிவத்தை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT