தமிழ்நாடு

மார்ச் 22 முதல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

நாகை, தஞ்சை, மயிலாடுதுறை தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம்.

DIN

திருச்சியில் மார்ச் 22ஆம் தேதி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜுன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக இறுதி செய்துள்ளது.

இதனிடையே வேட்பு மனுத்தாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 30-ம் தேதி வெளியாக உள்ளது. அதன் பிறகு தேர்தலுக்கு 17 நாள்கள் மட்டுமே உள்ளன.

இதனை கருத்தில் கொண்டு மார்ச் 22 முதல், முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி அருகே சிறுகனூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து சொந்த ஊரான திருவாரூரில் 23-ம் தேதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேச உள்ளார்.

பின்னர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

வயநாட்டுக்குக் கூடுதல் கிராமப்புற சாலைகள் ஒதுக்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT