தமிழ்நாடு

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

DIN
தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின். உடன் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழியை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி தனியார் தங்கும் விடுதியில் இருந்து காலையில் புறப்பட்ட முதல்வர் மு. க.ஸ்டாலின், தூத்துக்குடி காமராஜர் தினசரி காய்கனி சந்தையில் நடந்து சென்று அங்குள்ள வியாபாரி மற்றும் பொதுமக்களை சந்தித்து காய்கறிகள் வரத்து, காய்கறிகள் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்து திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

பின்னர், வாகனம் மூலம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் வழியாக சென்று சாலைகளில் சென்றவர்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

இதனை தொடர்ந்து, அவர் தூத்துக்குடி லையன்ஸ் டவுண் பகுதியில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிய முதல்வருக்கு நன்றி நன்றி என முழக்கமிட்டனர்.

தொடர்ந்து, லயன்ஸ் டவுண் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்ற மீனவர், வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார். பின்னர், தூத்துக்குடி மாநகர பகுதி முக்கிய சாலைகள் வழியாக வாகனத்தில் சென்றபடி தமிழக முதல்வர் கனிமொழியை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் சுயபடம் எடுத்தும் கைகளை கொடுத்தும் மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில், வேட்பாளர் கனிமொழி , அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

வெள்ளை மலரே... ஜாஸ்மின் ராத்!

பெண்பால் மகிமை... சத்யா தேவராஜன்!

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

SCROLL FOR NEXT