ராணிப்பேட்டை அருகே ஐஸ் வியாபாரி கொலை!
ராணிப்பேட்டை அருகே ஐஸ் வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளேரி பகுதியில் அரசு டாஸ்மாக் கடையின் அருகே ஐஸ் வியாபாரியான நாராயணமூர்த்தி(42) என்பவர் கத்தியால் குத்தி்க் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் சென்றவரை மறித்து மர்மநபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவல் துறையினர் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement
மேலும், முன்விரோதம் காரணமாக ஐஸ் வியாபாரி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.