சாவர்க்கருக்கு ஆளுநர் ரவி மரியாதை 
தமிழ்நாடு

சாவர்க்கருக்கு ஆளுநர் ரவி மரியாதை

உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் மரியாதை..

DIN

சாவர்க்கர் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு மலர்தூவி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினார்.

உதகை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் ரவி, அங்குள்ள ஆளுநர் மாளிகையில் சாவர்க்கரின் படத்துக்கு மரியாதை செலுத்திய புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், சாவர்க்கர் குறித்து ஆளுநர் ரவி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

“பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தமான் செல்லுலார் சிறையிலும், 16 ஆண்டுகள் ரத்னகிரி சிறையிலும் ஆங்கிலேயர்களால் உடலாலும் மனதாலும் சித்திரவதைகளை மிகவும் கொடூரமாக அனுபவித்த அவர் ஒரு உறுதியான சுதந்திர போராட்ட வீரர்.

எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசியவாத தலைவர் அவர். அவரது தியாகங்கள், ஒன்றுபட்ட, வளர்ந்த மற்றும் வலிமையான பாரதத்தை அதன் பாரம்பரிய பெருமிதத்துடன் கட்டியெழுப்ப அனைத்து இந்தியர்களையும் ஊக்குவிக்கும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT